Advertisement

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 10 Apr 2023 3:53:39 PM

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 10-ம்தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து 11-ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain,south tamil nadu and north tamil nadu , மழை,தென் தமிழகம் மற்றும் வட தமிழகம்

அதனைத்தொடர்ந்து 12 முதல் 14 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

மேலும் வெப்ப அலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். எனவே, குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வெயிலின்போது, வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மோர், இளநீர் போன்ற குளிர்பானங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|