Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sat, 03 June 2023 4:24:17 PM

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: இன்று முதல் 5 நாட்களுக்கு மழை ... மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் வருகிற 05.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து 06.06.2023 மற்றும் 07.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.

rain,weather centre ,மழை ,வானிலை மையம்

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|