Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் வருகிற 11-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

இன்று முதல் வருகிற 11-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sun, 06 Aug 2023 09:32:16 AM

இன்று முதல் வருகிற 11-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வருகிற 08.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வருகிற 09.08.2023 முதல் 11.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

rainy,tamil nadu,puducherry,karaikal ,மழை, தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.அதைத்தொடர்ந்து அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

Tags :
|