Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 25 Aug 2023 09:55:11 AM

தமிழகத்தில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வருகிற 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

rain,tamil nadu,puducherry,karaikal,meteorological center ,மழை, தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் ,வானிலை மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது வானிலை மையம் .

Tags :
|