Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 11 Nov 2023 10:16:51 AM

அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான மழைப் பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துகொண்டு வருகிறது. இதன் இடையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரம் 15ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வானிலை மையம் தகவலின்படி, சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

tamil nadu,puducherry,karaikal,rain , தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்,மழை

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 செல்சியஸ் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அதே போன்று, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 செல்சியஸ் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :