Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Mon, 01 May 2023 11:01:31 AM

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rainy,tamil nadu,puducherry,karaikal ,மழை ,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

மேலும் இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும்

இதனை அடுத்து கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|