Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 22 May 2023 5:01:43 PM

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

karaikal,puducherry,tamil nadu ,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

அதைத்தொடர்ந்து இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்குஅதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் அறிவித்து உள்ளது.

Tags :