Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல் மே 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல் மே 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 28 Sept 2022 6:00:42 PM

தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல் மே 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: இன்று முதல் மே 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ... தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து கொண்டியிருக்கிறது. இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது,

ஆந்திர கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, கடலூர்‌, திருவாரூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

rainy,tamil,puduvai,karaikal ,மழை,தமிழகம், புதுவை ,காரைக்கால்‌

இதை அடுத்து வருகிற செப்டம்பர் 30ம் தேதி, அக்டோபர் 1,2ம் தேதி ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செப்டம்பர் 30ம் தேதி இலங்கையை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்றானது மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்றும்
மேலும் அக்டோபர் 1,2ம் தேதி ஆகிய நாட்களிலும் தென்‌ கிழக்கு மற்றும்‌ அதை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|
|