Advertisement

வருகிற 9ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 04 Aug 2023 09:39:42 AM

வருகிற 9ஆம் தேதி  வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வருகிற 9-ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என அறிவித்துள்ளதுள்ளது.

rainy,tamil nadu,puducherry,karaikal ,மழை, தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் [பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|