Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் ஜூன் 28 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஜூன் 28 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

By: vaithegi Fri, 24 June 2022 3:43:32 PM

தமிழகத்தில் ஜூன் 28 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை  ஆய்வு  மையம்

சென்னை: சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

24.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

25.06.2022 முதல்‌ 28.06.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

meteorological center,rain,thunder , வானிலை  ஆய்வு  மையம் ,மழை,இடி

24.06.2022 முதல்‌ 28.06.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கேரளா – கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ இப்பகுதிகளுக்கு மீனவர்கள்‌ செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

24.06.2022, 25.06.2022: குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தென்‌ தமிழக கடலோரப்பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌
வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags :
|