Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 27 Oct 2023 11:53:57 AM

இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு


சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்தமிழகப் பகுதிகளில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

rainy,puducherry,tamil nadu ,மழை,தமிழ்நாடு, புதுச்சேரி

எனவே இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 27) ஓரிரு இடங்களிலும், வருகிற 28, 29, 30, 31 மற்றும் நவ. 1 ஆகிய தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து 29, 30-ம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|