Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Tue, 13 June 2023 11:14:49 AM

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தென்மேற்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது.

மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களிலும், வரும் 14, 15, 16-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும என தெரிவித்துள்ளார்.

rain,westerly wind,heat wave ,மழை ,மேற்கு திசைக் காற்று ,வெப்பச் சலனம்

அதேபோன்று, தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கும்.

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவையொட்டி இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|