Advertisement

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By: Monisha Thu, 30 July 2020 3:15:24 PM

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

tamil nadu,coastal districts,rain,chennai,weather ,தமிழ்நாடு,கடலோர மாவட்டங்கள்,மழை,சென்னை,வானிலை

அந்தமான், மன்னார் வளைகுடா, கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு போன்ற பகுதிகளில் பலத்த காற்று வீசும். எனவே, பலத்த காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழை பெய்துள்ள இடங்கள் வருமாறு:-
சின்னக்கல்லார் - 9 செ.மீ.
வால்பாறை - 9 செ.மீ.
சின்கோனா (கோவை) - 8 செ.மீ.
சித்தார் - 6 செ.மீ.
தேவலா - 5 செ.மீ
சோலையார் - 5 செ.மீ. ஆகிய இடங்களில் மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags :
|