Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 48 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு

By: Nagaraj Sat, 25 July 2020 7:36:42 PM

அடுத்த 48 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு

மழை பெய்யும் வாய்ப்பு... அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் வெயிலின் கடுமை குறைவாக தென்படுகிறது. தற்போது மீண்டும் தென் தமிழகத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

அதில், வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாளைக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

fishermen,instruction,rain,weather center,hurricane ,மீனவர்கள், அறிவுறுத்தல், மழை, வானிலை மையம், சூறாவளி

அதேபோல, மற்றொரு அறிவிப்பில், "ஜூலை 25, அதாவது இன்றைய தினம், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுக்கூடும்.

ஜூலை 26 தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகள் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 27 மற்றும் ஜூலை 28 தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 29 தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

அதனால் இந்த 3 நாட்களும் சூறாவளி வீசபோவதால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|