Advertisement

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 12 Sept 2023 12:57:18 PM

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rainy,puducherry,tamil nadu , மழை,தமிழ்நாடு, புதுச்சேரி

அதேபோன்று, நாளை முதல் வருகிற 17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|