Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமாக மழை பெய்யும் வாய்ப்பு

21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமாக மழை பெய்யும் வாய்ப்பு

By: Nagaraj Tue, 06 Oct 2020 3:34:52 PM

21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமாக மழை பெய்யும் வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிலும், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தருமபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

chennai,weather,research center,chance of rain,fishermen ,சென்னை, வானிலை, ஆய்வு மையம், மழைக்கு வாய்ப்பு, மீனவர்கள்

சென்னையை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அக்.,9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே உருவாகும். இதைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மாண்டலமாக வலு பெறக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :