Advertisement

9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Tue, 03 Nov 2020 09:16:12 AM

9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் சென்னையில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னர் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 8 செ.மீ. மழையும், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணைப்பகுதியில் 7 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.

இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

northeast monsoon,thunder,rain,weather,chennai ,வடகிழக்கு பருவமழை,இடி,மழை,வானிலை,சென்னை

தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) மதுரை, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரையில் மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags :
|