Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 11-ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு

இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 11-ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Thu, 10 Nov 2022 2:29:08 PM

இந்த  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 11-ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10-12-ம் தேதிகளில் நகரக்கூடும்.

எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

heavy rain,chennai ,அதி கனமழை ,வானிலை ஆய்வு மையம்

மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 11-ம் தேதி (நாளை) அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

அதைத்தொடர்ந்து தர்மபுரி, சேலம், நாகை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரி இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :