Advertisement

இன்று இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sun, 05 Nov 2023 10:23:19 AM

இன்று இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் ... நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

heavy rains,nilgiris,coimbatore,theni,tenkasi,tirunelveli ,கனமழை,நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ,திருநெல்வேலி


இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடந்த 24 மணி நேரத்தில் 11 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சிபுரத்தில் 4.8 சென்டிமீட்டரும், சேலத்தில் 4 சென்டிமீட்டரும், வால்பாறை, அருப்புக்கோட்டையில் தலா 3.9 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மேலும் திருவள்ளுவர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கும்மிடிப்பூண்டியில் 3 சென்டிமீட்டரும், செங்குன்றம், ஊத்துக்கோட்டை, ஜமீன் கொரட்டூரில் தலா ஒரு சென்டிமீட்டர் மழை பெய்து பதிவாகி உள்ளது.

Tags :
|