Advertisement

தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Thu, 07 Sept 2023 12:09:35 PM

தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனை அடுத்து வருகிற செப்.8 ஆம் தேதி முதல் செப்.10 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

rainy,tamil nadu,puducherry,karaikal , மழை, தமிழகம், புதுச்சேரி ,காரைக்கால்

கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் செப்.11 மற்றும் செப்.12 ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அதில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|