Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்திராயன் இறுதி உயரம் உயர்த்தும் நடவடிக்கை: இஸ்ரோ அறிவிப்பு

சந்திராயன் இறுதி உயரம் உயர்த்தும் நடவடிக்கை: இஸ்ரோ அறிவிப்பு

By: Nagaraj Tue, 25 July 2023 7:29:10 PM

சந்திராயன் இறுதி உயரம் உயர்த்தும் நடவடிக்கை: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிக்கோட்டா: இஸ்ரோ அறிவிப்பு... சந்திரயான்-3 விண்கலத்தின் 5ஆவது மற்றும் இறுதி உயரம் உயர்த்தும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட அந்த விண்கலம், புவியின் நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, 5 கட்டங்களாக அதனின் உயரம் உயர்த்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

isro,announcement,towards the moon,action,midnight ,இஸ்ரோ, அறிவிப்பு, நிலவை நோக்கி, நடவடிக்கை, நள்ளிரவு

பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அப்பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதுடன், விண்கலத்தின் செயல்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இதனிடையே, ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று நள்ளிரவு 12 மணி முதல் ஒரு மணி வரை நிலவை நோக்கி உந்தித் தள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Tags :
|
|