Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை - ஜோலார்பேட்டை மின்ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை - ஜோலார்பேட்டை மின்ரயில் சேவையில் இன்று மாற்றம்

By: vaithegi Wed, 27 Sept 2023 09:31:10 AM

சென்னை - ஜோலார்பேட்டை மின்ரயில் சேவையில் இன்று மாற்றம்


சென்னை: சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை மார்க்கத்தில், அரக்கோணம் - சோழிங்கர் யார்டு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதையடுத்து மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு இன்று (செப்.27) காலை 8.20, 9.10, முற்பகல் 11 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.எனவே இதற்கு பதிலாக, மூர்மார்க்கெட் வளாகம்-கடம்பத்தூருக்கு காலை 8.20, முற்பகல் 11 மணிக்கு பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மூர்மார்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு இன்று காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. இதற்கு மாற்றாக, மூர்மார்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு காலை 9.10, 10 மணிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

electric railway service,chennai,jollarpet ,மின்ரயில் சேவை,சென்னை ,ஜோலார்பேட்டை

அரக்கோணம்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று காலை 10 மணி, முற்பகல் 11.15, நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கு பதிலாக, கடம்பத்தூர்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு காலை 10.25, முற்பகல் 11.35, மதியம் 1.35 மணி ஆகிய நேரங்களில் பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும் திருத்தணி-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று காலை 10.15, நண்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கு பதிலாக, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு முற்பகல் 11.10 மணி, நண்பகல் 12.35 மணி ஆகிய நேரங்களில் பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மூர்மார்க்கெட் வளாகம்-திருப்பதிக்கு இன்று காலை9.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இதனை அடுத்து இதற்கு பதிலாக, மூர்மார்க்கெட் வளாகம்-கடம்பத்தூருக்கு காலை 9.50 மணிக்கு மெமு விரைவு சிறப்புரயில் இயக்கப்படும். இத்தகவல் சென்னைரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :