Advertisement

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போக்குவரத்தில் மாற்றம்

By: vaithegi Thu, 06 July 2023 11:06:50 AM

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போக்குவரத்தில் மாற்றம்


சென்னை: மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதியில்லை ... சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் பல இடங்களில் சாலை வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதே போன்று தற்போது மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து நாளை முதல் இன்னும் 1 வருடத்திற்கு மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது

சென்னை கலங்கரை விளக்கம் முதல் காந்தி சிலை வரையிலான சர்வீஸ் சாலையில் மட்டும், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

change in chennai traffic,metro works ,சென்னை போக்குவரத்தில் மாற்றம் ,மெட்ரோ பணிகள்

மேலும், சென்னையில் ஒலி மாசு உயர்ந்து வருவதன் காரணமாக சென்னை பிரதான சாலையில் உள்ள சிக்னல்களில் ஒலித்து வந்த பாடல்கள் தற்போது நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளன.

பாடல்களை ஒலிபரப்ப வேண்டாம் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இது குறித்த அறிவிப்பை போக்குவரத்து ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார். விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், போக்குவரத்து போலீசார் பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டு உள்ளது

Tags :