Advertisement

வரும் ஜனவரி முதல் திகதி முதல் வருமானவரியில் மாற்றம்

By: Nagaraj Sat, 24 Dec 2022 08:56:27 AM

வரும் ஜனவரி முதல் திகதி முதல் வருமானவரியில் மாற்றம்

கொழும்பு: எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வருமானம் பெறும் வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், ஒரு இலட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை.

wages,ministry of finance,income tax,income,change , ஊதியம், நிதி அமைச்சகம், வருமான வரி, வருமானம், மாற்றம்

மேலும், 150,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 3500 ரூபாய் வரி, 200,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 10,500 ரூபாய் வரி, 250,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 21,000 ரூபாய் வரி, 300,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 35,000 ரூபாய் வரி, 350,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 52,500 ரூபாய் வரி, 400,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 70,500 ரூபாய் வரி,10 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 286,500 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளது.

Tags :
|
|