Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணி காரணமாக மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் சேவையில் மாற்றம்

By: vaithegi Sun, 31 July 2022 12:00:23 PM

பராமரிப்பு பணி காரணமாக மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சிவகங்கை – மேல கொன்னகுளம், திருப்பாச்சேத்தி – மானாமதுரை மற்றும் சூடியூர் – பரமக்குடி ரெயில் நிலையங்கள் இடையே ஆகஸ்ட் மாதத்தில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக ரமேசுவரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06652) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும். திருச்சி – மானாமதுரை – திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06829/06830) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை சிவகங்கை – மானாமதுரை ரெயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

special train services,maintenance work,madurai,rameswaram ,சிறப்பு ரெயில் சேவை,பராமரிப்பு பணி , மதுரை , ராமேஸ்வரம்,

இதனை தொடர்ந்து திண்டுக்கல் – அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்ட் 31 வரை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் – நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.

மேலும் இதே காலத்தில் சென்னை – குருவாயூர் விரைவு ரெயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :