Advertisement

சேலத்தில் 16 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம்

By: vaithegi Fri, 01 July 2022 7:17:10 PM

சேலத்தில் 16 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம்


சேலம் : சேலம் ரயில் நிலையத்தில் இருந்து மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில்வே பாலத்தில் வருகிற 4ம் தேதி அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த ரயில் பாதையில் செல்லும் ரயில்களின் இயக்க நேரம் மாற்றப்படுவதாக சேலம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு பதிலாக 9 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இது 3 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது.
எர்ணாகுளம்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் (12678) எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு பதிலாக 12.10 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கத்தை விட 3 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

கோவை -சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (12244) கோவை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு பதிலாக 4.35 மணிக்கு புறப்படுகிறது.
கோவை-சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் (12676) ரயில் கோவை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கத்தை விட 1.30 மணி நேரம் காலதாமதமாக புறப்படும்.

trains,express train , ரயில்கள்,எக்ஸ்பிரஸ் ரயில்

சென்னை சென்ட்ரல்- மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (22637) 20 நிமிடமும், டாட்டா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (18189) 20 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.
திருவனந்தபுரம் – செகந்தராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் (17229) 20 நிமிடமும், சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12679) 20 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.
ராஜ்கோட் – கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16613) 1.30 நிமிடமும், கொச்சுவேலி- கோர்பா எக்ஸ்பிரஸ் ரயில் (22648) 40 நிமிடமும், பெங்களூர் கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (22665) 45 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.

திருப்பதி – கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (22615) 20 நிமிடமும், சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (12695) 15 நிமிடமும் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும் என சேலம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|