Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரக்கோணம், சோளிங்கரில் ..புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

அரக்கோணம், சோளிங்கரில் ..புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

By: vaithegi Wed, 13 Sept 2023 10:48:36 AM

அரக்கோணம், சோளிங்கரில்  ..புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை மார்க்கத்தில் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பணிமனையில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் ..

மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு இன்று (செப்.13) காலை 8.20, 9.10, முற்பகல் 11 மணிஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கு மாற்றாக, மூர்மார்க்கெட் வளாகம்-கடம்பத்தூருக்கு காலை 8.20, முற்பகல் 11 மணிக்கு சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும் இதுதவிர, மூர்மார்க்கெட் வளாகம்- திருவள்ளூருக்கு இன்று காலை 9.10, 10 மணிக்கு பாசஞ்சர் சிறப்பு ரயில் இயக்கப்படும். மூர்மார்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு இன்று காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.

suburban electric train service,arakonam,solingar ,புறநகர் மின்சார ரயில் சேவை,அரக்கோணம், சோளிங்கரில்


அரக்கோணம்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று காலை 10,முற்பகல் 11.15, நண்பகல் 12 ஆகியநேரங்களில் இயக்கப்படும் மின்சாரரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.இதையடுத்து இதற்கு மாற்றாக, கடம்பத்தூரிலிருந்து மூர்மார்க்கெட் வளாகத்துக்கு காலை 10.25, 11.35,மதியம் 1.25 மணிக்கு பாசஞ்சர்சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

திருத்தணி-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு காலை 10.15, நண்பகல்12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கு மாற்றாக, திருவள்ளூர்-மூர்மார்கெடுக்கு இன்றுகாலை 11.10, நண்பகல் 12.35 மணிக்குபாசஞ்சர் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :