Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறைந்தபட்ச வருகை இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறையில் மாற்றம்

குறைந்தபட்ச வருகை இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறையில் மாற்றம்

By: vaithegi Fri, 17 Mar 2023 3:49:17 PM

குறைந்தபட்ச வருகை இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறையில் மாற்றம்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பொதுத்தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14,710 மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த சமயத்தில், பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் 50,674 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இது பற்றி அரசியல் கட்சிகளின் தலைவர் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கொண்டு வருகின்றனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏன் 50,674 பேர் எழுதவில்லை என்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தி இருந்தனர்.

examination,department of education ,தேர்வு ,பள்ளிக்கல்வித்துறை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். இந்நிலையில், பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றப்பட்டுள்ளது. 2 அல்லது 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்குகிறோம் என மாணவர்களை தேர்வு எழுத வைக்க முயற்சிக்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :