Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவை முன்னிட்டு ... போக்குவரத்தில் மாற்றம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவை முன்னிட்டு ... போக்குவரத்தில் மாற்றம்

By: vaithegi Mon, 08 Aug 2022 11:17:34 AM

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவை முன்னிட்டு ... போக்குவரத்தில்  மாற்றம்

சென்னை: 188 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் நடைபெற்று கொண்டு வருகிறது. மேலும், நாளையுடன் இந்த போட்டி நிறைவடைய இருக்கிறது. அதாவது, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா என்பதால் தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்-வீராங்கனைகள் என பலரும் அதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இதனால், சென்னையில் நாளை மதியம் 3 மணியில் இருந்து இரவு 9 மணி வரைக்கும் ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, சென்டிரல் மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகளில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

chess olympiad competition,transport change ,செஸ் ஒலிம்பியாட் போட்டி ,போக்குவரத்து மாற்றம்

எனவே, சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக இருந்தால் நாளை மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை வணிக ரீதியிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்டிரல் வழியாக செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பிராட்வேயில் இருந்து குறளகம், தங்கச்சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் செல்லும் வணிக வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதி வழியாக செல்ல நினைக்கும் வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாக செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :