Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பில் மாற்றம்

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பில் மாற்றம்

By: vaithegi Thu, 20 Oct 2022 3:06:21 PM

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பில் மாற்றம்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் வயது வரம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே அதன் படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு வயது வரம்பு 40 என குறிப்பிட்டது. அதே போன்று இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 45 என நிர்ணயம் செய்யப்பட்டது.

teacher selection,age limit ,ஆசிரியர் தேர்வு,வயது வரம்பு

இதையடுத்து இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பில் மாற்றம் செய்துள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களில் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 40லிருந்து 45 ஆகவும்,

மேலும் மற்றவர்களுக்கு 45லிருந்து 50ஆகவும் உயர்த்தி இருப்பதாக வெளியான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர் தகுதிதேர்விற்கு தயாராகி வருவோர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Tags :