Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை சென்னையில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதைகள் மாற்றம்

நாளை சென்னையில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதைகள் மாற்றம்

By: vaithegi Fri, 04 Nov 2022 7:06:31 PM

நாளை சென்னையில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதைகள் மாற்றம்

சென்னை: போக்குவரத்து பாதைகள் மாற்றம் ... சென்னையில் முக்கிய பகுதிகளில் சாலை போக்குவரத்து நெரிசலை தடுக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த ரயில்களில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை ஏராளமானோர் பயணித்து கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.63,246 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நாளை முதல் சென்னையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே அதன்படி கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 5 முதல் 11 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

transport change,chennai ,போக்குவரத்து மாற்றம், சென்னை

இதையடுத்து இந்த ஒரு வார காலத்திற்கு டிடிகே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பு மற்றும் கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு அதனை தொடர்ந்து சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

அதனால் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலையை அடைய வேண்டும். மேலும் இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை வழியாக செல்லாம் என மாநகர போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :