Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் கிரெடிட் கார்டு, வருமான வரி விதிகள் உள்ளிட்ட 5 சேவைகளில் மாற்றங்கள் அமல்

நாளை முதல் கிரெடிட் கார்டு, வருமான வரி விதிகள் உள்ளிட்ட 5 சேவைகளில் மாற்றங்கள் அமல்

By: vaithegi Thu, 30 June 2022 8:27:56 PM

நாளை முதல் கிரெடிட் கார்டு, வருமான வரி விதிகள் உள்ளிட்ட 5 சேவைகளில் மாற்றங்கள் அமல்

இந்தியா: ஜூலை மாதத்தில் உங்கள் பண விவகாரங்களை பாதிக்கும் பல மாற்றங்கள் அமல்படுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் ஜூலை 1 ஆம் தேதியான நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டின் தொடக்கத்தில் பயனர்களின் நிதி விவகாரங்கள் தொடர்பான பல்வேறு விதிகளில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன்படி, கிரெடிட் கார்டு விதிகள், வருமான வரி விதி மாற்றம் முதல் கிரிப்டோகரன்சிகள் மீதான டிடிஎஸ் வரை ஜூலை மாதத்தில் பல புதிய விதிகள் ஏற்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல், கிரெடிட் கார்டு மூடல், பில்லிங் சுழற்சி மற்றும் பிற விதிகள் மாற்றப்பட உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விதிகளின் கீழ் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற கிரெடிட் கார்டுகளை அனுப்ப முடியாது. இது தவிர, உங்கள் கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சி முந்தைய மாதத்தின் 11ம் தேதி தொடங்கி நடப்பு மாதத்தின் 10ம் தேதியில் முடிவடையும் என்று ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏழு வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கோரிக்கையின் பேரில் கிரெடிட் கார்டு மூடப்படாவிட்டால், அது மூடப்படும் வரை வாடிக்கையாளருக்கு தினசரி ரூ.500 செலுத்த வேண்டும் என்பது நிறுவனத்தின் பொறுப்பாகும்.

அடுத்ததாக, பான் எண்ணை ஆதரவுடன் இணைக்காதவர்கள் ஜூலை 1 முதல் இரு ஆவணங்களையும் இணைக்க முயன்றால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னதாக இந்த சேவைக்கு ஜூன் 30 வரை ரூ.500 அபராதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும், மத்திய நேரடி வரிகள் வாரியம் பான் மற்றும் ஆதார் இணைக்கும் காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. அந்த வகையில் ஜூன் 30க்கும் முன்னாக ஆதாரை, பானுடன் இணைக்காதவர்கள் ஜூலை 1க்கு மேல் ரூ. 1,000 அபராதமாக செலுத்த வேண்டும்.

tax rules,credit card ,வரி விதிகள்,கிரெடிட் கார்டு

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் (VDA) அல்லது கிரிப்டோ சொத்துக்களின் மூலத்தில் (TDS) கழிக்கப்பட்ட வரி விதிப்பு பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். சமீபத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மெய்நிகர் சொத்துக்களை மாற்றும் போது செலுத்தப்படும் தொகையில் 1 சதவீதத்தில் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி விதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்தை (VDA) மாற்றுவதற்கு 1 சதவீதத்திற்கு சமமான தொகையைக் கழிக்க வேண்டும்.

மருத்துவ நிறுவனங்களிடமிருந்து இலவசப் பொருட்களைப் பெறும் மருத்துவர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பிற நபர்கள் அவற்றை பெறுவதற்கு ஜூலை 1 முதல் வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த செயல்பாடுகளுக்கு நிதிச் சட்டம் 2022, வருமான வரிச் சட்டம், 1961ல் 194R என்ற புதிய பிரிவை மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, இந்த நன்மைகளைப் பெறுபவர்கள் இனி 10 சதவீத விகிதத்தில் TDS செலுத்த வேண்டும்.

இறுதியாக, டீமேட் கணக்கிற்கான உங்கள் KYCஐ செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பின்பாக அந்த கணக்கு செயலிழக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. அதனால் பெயர், முகவரி, பான், செல்லுபடியாகும் மொபைல் எண், வருமான வரம்பு மற்றும் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்களுடன் உங்கள் KYCஐ புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். இதனை செய்யவில்லை என்றால் ஜூலை 1 முதல் உங்கள் டிமேட் கணக்கு செல்லாததாகிவிடும்.

Tags :