Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்

By: Nagaraj Fri, 12 June 2020 6:21:35 PM

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு, ஒரு சில தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாகவும், கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் தனியார் பள்ளிகள் இயக்குனரகத்துக்கு புகார்கள் சென்றுள்ளன.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய இயக்குனரகம், ஆன்லைன் வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

private schools,fees,online,alert,action ,தனியார் பள்ளிகள், கட்டணம், ஆன்லைன், எச்சரிக்கை, நடவடிக்கை

நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றும் அதில் தெரிவித்துள்ளது.

விதிகளுக்கு புறம்பாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தனியார் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அறிவுறுத்தி உள்ளார்.

Tags :
|
|
|