Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மன்னராக இன்று சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார்

மன்னராக இன்று சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார்

By: Nagaraj Sat, 10 Sept 2022 2:20:53 PM

மன்னராக இன்று சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார்

லண்டன் : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக மன்னராக பொறுப்பேற்க உள்ளார்.

ராணியின் இறுதிச் சடங்கு வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரண்மனையில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், முதுமை காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் காலமானார். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது.

அரச குடும்பத்து நெறிமுறைகளின் படி, ராணியின் உடல்நலக் குறைவு தொடர்பான நிகழ்வுகள், 'ஆப்பரேஷன் லண்டன் பிரிட்ஜ்' என்று அழைக்கப்படுகிறது. ராணியின் உயிர் பிரிந்த தகவலை அவரது தனி செயலர், பிரதமர் லிஸ் டிரஸிடம் தெரிவித்தார். அப்போது, 'லண்டன் பிரிட்ஜ் சரிந்தது' என்ற வார்த்தைகளையே அவர் பயன்படுத்தினார்.

ராணியின் மறைவுக்கு பிறகு பிரிட்டன் மன்னராக, அவரது மகன் சார்லஸ் இன்று பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரளாக வந்து, அரண்மனை வாயிலில் இறந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சார்லஸ்,மன்னராகிறார்,10 நாள்,இறுதிச்சடங்கு,மக்கள்,அஞ்சலி ,சார்லஸ், மன்னராகிறார், 10 நாள், இறுதிச்சடங்கு, மக்கள், அஞ்சலி

ராணியின் மறைவுக்கு பின், 10 நாட்கள் கழித்தே இறுதிச் சடங்கு நடப்பது வழக்கம். இந்நிலையில், வரும் 19ல் இறுதிச் சடங்கு நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பார்லிமென்டின் பொது சபை நேற்று கூடி, ராணிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. எம்.பி.,க்கள் அனைவரும் தங்கள் இரங்கல் செய்தியை வாசித்தனர் பார்லி., அலுவல்கள் அனைத்தும் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படும்.

இதை தொடர்ந்து, பிரதமரும், அமைச்சரவை குழுவும் புதிய மன்னரை சந்திக்கும்.ஸ்காட்லாந்து பால்மோரல் அரண்மனையில் ராணி உயிரிழந்ததால், அவரது உடல் ரயில் வாயிலாக லண்டன் எடுத்து வரப்படும்.
இதை, 'ஆப்பரேஷன் யூனிகார்ன்' என்று அழைக்கின்றனர். பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து, லண்டன் பார்லி.,யான வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனைக்கு ராணியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்வு, 'ஆபரேஷன் லயன்' என்று அழைக்கப்படுகிறது. வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன் அருகே உள்ள தேவாலயத்தில் முழு அரசு மரியாதையுடன் ராணியின் இறுதிச் சடங்குகள் நடக்கும்.
சார்லஸ், பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் மன்னராகிறார். இவருக்கும், மறைந்த இளவரசி டயானாவுக்கும், வில்லியம்ஸ், ஹாரி என்ற இரு மகன்கள் உள்ளனர்.மூத்த மகனான வில்லியம்ஸ், தந்தைக்கு அடுத்தபடியாக மன்னராகும் தகுதியை பெறுகிறார். இவரது மூன்று குழந்தைகள் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசுகளாகி உள்ளனர்.

இரண்டாவது மகன் ஹாரி, அரச குடும்பத்தைச் சேராத மேகன் மார்கெல் என்பவரை மணந்ததால், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறினார். இவருக்கு சஸ்செக்ஸ் பிரபு என்ற பட்டம் உள்ளது. இதில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

Tags :