Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துருக்கி அதிபரை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து சார்லி ஹேப்டோ பத்திரிக்கை புகைப்படம்

துருக்கி அதிபரை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து சார்லி ஹேப்டோ பத்திரிக்கை புகைப்படம்

By: Karunakaran Thu, 29 Oct 2020 12:15:39 PM

துருக்கி அதிபரை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து சார்லி ஹேப்டோ பத்திரிக்கை புகைப்படம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோ பல ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின், 2011,2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அந்த பத்திரிக்கை அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையின் கார்ட்டூனிஸ்ட் உள்பட பத்திரிக்கை ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16-ம் தேதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலையை செய்த ரஷியாவில் உள்ள சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வந்த 18 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

charlie hebdo magazine,turkish president,controversial manner,etrocan ,சார்லி ஹெப்டோ இதழ், துருக்கிய ஜனாதிபதி, சர்ச்சைக்குரிய முறையில், எட்ரோகன்

கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார். அப்போது பேசிய அதிபர் இம்மானுவேல்,’கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை’ என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பிரான்ஸ் மீது துருக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. வரலாற்று ஆசியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் துருக்கி-பிரான்ஸ் இடையேயான வார்த்தை போர் முற்றியுள்ளது.

இந்நிலையில், துருக்கி அதிபர் தாயூப் எர்டோகனை விமர்சிக்கும் விதமாக சார்லி ஹேப்டோ பத்திரிக்கை சர்ச்சைக்குரிய வகையில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு துருக்கு அதிபர்
எர்டோகன், இது ஒரு ’வெறுக்கத்தகு தாக்குதல்’ என்று விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில், எர்டோகன் மீதான சார்லி ஹேப்டோவின் கேலிச்சித்திரத்தை கண்டித்தும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுக்கு எதிராகவும் துருக்கியில் போராட்டங்கள் நடைபெற்றது.

Tags :