Advertisement

லடாக்கில் அத்துமீற முயன்ற சீன ராணுவம் விரட்டியடிப்பு

By: Nagaraj Mon, 31 Aug 2020 5:53:24 PM

லடாக்கில் அத்துமீற முயன்ற சீன ராணுவம் விரட்டியடிப்பு

சீன ராணுவத்தை விரட்டியடித்த இந்தியா... லடாக் எல்லையில் மீண்டும் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையையும் மீறி சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

லடாக்கின் சுஷுல் அருகே பாங்காங் ஏரியின் தென் கரைக்கு அருகே சீன ராணுவம் அத்துமீற முயற்சித்துள்ளது. ஆனால் அவர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது. இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக கர்னல் அமன் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

indian army,china,exile,ladakh border ,இந்திய ராணுவம், சீனா, விரட்டியடிப்பு, லடாக் எல்லை

ராணுவ, தூதரக பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை சீனா மீறி உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இந்திய ராணுவம் அமைதியை மட்டுமே விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 'இந்திய ராணுவம் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தவும், சீன நோக்கங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுத்தது. பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கடைபிடிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீற முயன்றன. ஆனால் இந்திய ராணுவம் அவர்களின் நோக்கங்களை அறிந்து அத்துமீறலை தோல்வியடையச் செய்தது' என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|