Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கருவிழி பதிவு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க சோதனை

கருவிழி பதிவு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க சோதனை

By: vaithegi Fri, 18 Nov 2022 3:29:14 PM

கருவிழி பதிவு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க சோதனை

சென்னை: ரேஷன் கடைகளில் அமலாகும் புதிய திட்டம் .... தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கு பயோ மெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக பயோ மெட்ரிக் செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் சர்வர் பிரச்சனையால் பயோ மெட்ரிக் செயல்படாமல் இருந்தது. இதனால், பயனர்களுக்கு பழைய முறையிலேயே சில காலம் பொருட்கள் வழங்கப்பட்டது.

ration shop,biometric ,ரேஷன் கடை,பயோ மெட்ரிக்

இதையடுத்து இந்த நிலையில், தமிழகத்தில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க சோதனை நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த நடைமுறை துவங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழக ரேஷன் கடைகளில் கழிவறை வசதிகள் அமைக்கப்படும் என்றும், கடைக்கு வரும் பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :