Advertisement

வாட்ஸ் அப்பில் இனி Status பார்ப்பது ஈஸி

By: vaithegi Tue, 06 Dec 2022 1:54:46 PM

வாட்ஸ் அப்பில் இனி Status பார்ப்பது ஈஸி

இந்தியா: தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலிகளில் ஒன்றான WhatsApp செயலியில் தினந்தோறும் பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் புதுப்புது அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது.

இதனால் இச்செயலியை உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான மக்கள் உபயோகித்து கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பை Desktop-ல் பயன்படுத்தும் நபர்களுக்கு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

whatsapp status ,வாட்ஸ் அப்,Status

அதாவது இதற்கு முன்பாக Desktop-ல் பயன்படுத்தும் WhatsApp பயனாளர்கள் தங்களின் Contact-இல் இருக்கும் நபர்களின் புதிய Status-களை பார்ப்பதற்கு Status என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் தற்போது புதிதாக எவரேனும் Status வைத்திருந்தால் அவருடைய Profile-ஐ சுற்றி ஒரு வட்ட வளையம் பச்சை நிறத்தில் காண்பிக்கப்படும்.

இதனை அடுத்து அந்த DP மீது நீங்கள் கிளிக் செய்தால் மட்டும் போதும். அவர்களின் Status காண்பிக்கப்படும். இந்த அம்சம் தற்போது iPhone, Android போன்றவற்றில் கிடைக்கிறது. இனி வரும் காலத்தில் Desktop பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என WABetainfo தெரிவித்துள்ளது.

Tags :