Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை - நெல்லை வந்தே பாரத் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது

சென்னை - நெல்லை வந்தே பாரத் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது

By: vaithegi Fri, 22 Sept 2023 2:51:36 PM

சென்னை - நெல்லை வந்தே பாரத் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது

சென்னை: வந்தே பாரத் ரயிலானது கடந்த 2019 ஆம் ஆண்டு புதுடில்லி - வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது. தற்போது சென்னை -மைசூர், சென்னை - கோவை என மொத்தம் 23 வந்தே பாரத் இயக்கப்பட்டு கொண்ட வருகின்றன. அதிவேகத்தில் செயல் திறன் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு விமானத்திற்கு நிகரான சுழலும் இருக்கைகள், ஏசி, விசாலமான ஜன்னல்கள் என சொகுசாக பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோன்று, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளது.

vande bharat fare,chennai,nellie ,வந்தே பாரத் கட்டணம் ,சென்னை , நெல்லை


அந்த வகையில் நெல்லை -சென்னை இடையேயான 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. நேற்று சென்னையிலிருந்து நெல்லைக்கு இயக்கிய சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், தினமும் ரயில் புறப்படும் நேரத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. வருகிற 24ம் தேதியன்று நெல்லையிலிருந்து 'வந்தே பாரத்' ரயிலை காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில் நாளை மறுநாள் தொடங்க உள்ள சென்னை நெல்லை வந்தே பாரத் ரயிலின் உத்தேச பயண கட்டண விபரம் வெளியாகியுள்ளது. Executive Chair கட்டணம் - 2655 (உணவு இல்லாமல்); Chair Car - ≈1320 (உணவு இல்லாமல்) EC வகுப்பில் உணவு கட்டணம் 3370 ஆகவும், CC வகுப்பில் 7300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Tags :