Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கடற்கரை-தாம்பரம் இரவு ரயில் சேவை இன்று முதல் ரத்து.. தெற்கு ரயில்வே தெரிவிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் இரவு ரயில் சேவை இன்று முதல் ரத்து.. தெற்கு ரயில்வே தெரிவிப்பு

By: vaithegi Wed, 29 Nov 2023 10:12:50 AM

சென்னை கடற்கரை-தாம்பரம் இரவு ரயில் சேவை இன்று முதல் ரத்து.. தெற்கு ரயில்வே தெரிவிப்பு

சென்னை: சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்பவர்கள் அதிக அளவில் பயணித்து கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் மின்சார ரயில் பயன்படுத்தி பயனடைந்து கொண்டு வருகின்றனர். அவ்வப்போது பராமரிப்பு பணிகளுக்காக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று.

southern railway,chennai beach,tambaram ,தெற்கு ரயில்வே ,சென்னை கடற்கரை,தாம்பரம்

அந்த வகையில் தெற்கு ரயில்வே சென்னை கூட்டம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ”பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று முதல் வருகிற டிச.14-ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்த நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :