Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை சென்ட்ரல் டூ விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவைஅரை மணி நேரம் நிறுத்தம்

சென்னை சென்ட்ரல் டூ விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவைஅரை மணி நேரம் நிறுத்தம்

By: vaithegi Fri, 03 Mar 2023 6:07:10 PM

சென்னை சென்ட்ரல் டூ விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவைஅரை மணி நேரம் நிறுத்தம்

சென்னை : சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரயில் சேவை அரை மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை நம்பி ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். காலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில் ஏராளமானோர் மெட்ரோவை நம்பியுள்ளனர்.

வழக்கம் போன்று இன்று காலை மெட்ரோ ரயில் நிலையம் வந்த பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

railway service,chennai ,ரயில் சேவை ,சென்னை

வடசென்னை திருவெற்றியூர் விம்கோ மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை விமான மெட்ரோ ரயில் நிலையம் செல்லக்கூடிய வழித்தடத்தில் சிக்னல் பிரச்சனை காரணமாக அரை மணி நேரம் மெட்ரோ ரயில் சேவை தாமதமானது.

இதையடுத்து தற்போது சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சேவை தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய மெட்ரோ பயணிகள் அரைமணி நேர தாமதத்தால் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

Tags :