Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மாநகராட்சிக்கு நல் ஆளுமை விருது...முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!

சென்னை மாநகராட்சிக்கு நல் ஆளுமை விருது...முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!

By: Monisha Sat, 15 Aug 2020 11:40:32 AM

சென்னை மாநகராட்சிக்கு நல் ஆளுமை விருது...முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!

நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார். பின்னர் பல்வேறு துறையினருக்கு பல விருதுகளை வழங்கி சிறப்பித்தார். அதன் விபரம் வருமாறு:-

* கொரோனா நோய் தொற்றின் சங்கிலியை உடைத்த சென்னை மாநகராட்சிக்கு நல் ஆளுமை விருது

* புதுமையான உத்தியை கையாண்டு நுண்ணீர் பாசனத்தில் சிறந்து விளங்கும் வேளாண் துறைக்கு நல் ஆளுமை விருது

* கொரோனா காலத்தில் தடையின்றி மருந்து கிடைக்க செய்த மருத்துவ சேவை கழகத்திற்கு நல் ஆளுமை விருது

* ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது தரப்பட்டது

* துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது 3 பெண்களுக்கு வழங்கப்பட்டது.

* பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளிக்கு கல்பனா சாவ்லா விருது

independence day,chennai,corporation,good personality award,edappadi palanisamy ,சுதந்திர தினம்,சென்னை,மாநகராட்சி,நல் ஆளுமை விருது,எடப்பாடி பழனிசாமி

* கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது

* மாற்று திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது

* சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளிக்கு தொண்டு நிறுவனத்திற்காக விருது

* சிறந்த சமூக பணியாளர் திருச்சி சாந்தகுமார், சிறந்த மருத்துவராக சேலம் சியாமளாவுக்கு விருது

* அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலாவிற்கு சிறப்பு நிறுவனத்திற்கான விருது

* சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி விருது வழங்கப்பட்டது

* கோவை கோதணவள்ளிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த சமூக பணியாளர் விருது

* கடலூர் கிரீடு நடனசபாபதிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த தொண்டு நிறுவன விருது

* உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

Tags :