Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்கள் உரிய தேதிக்குள் வரியை செலுத்துமாறு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்கள் உரிய தேதிக்குள் வரியை செலுத்துமாறு மாநகராட்சி அறிவுறுத்தல்

By: vaithegi Sun, 29 Jan 2023 8:43:32 PM

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்கள் உரிய தேதிக்குள் வரியை செலுத்துமாறு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: உரிய தேதிக்குள் வரியை செலுத்த அறிவுறுத்தல் .... தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவிலான வருவாய் சொத்து வரியில் இருந்து கிடைக்கிறது. இவ்வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் மற்றும் சாலைகளை சீரமைத்தல், குடிநீர் இணைப்புகளை சரி செய்தல், கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த சொத்து வரியை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும்.இந்நிலையில் நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் இன்னும் 5 லட்சம் பேர் சொத்து வரியை செலுத்தாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

corporation,chennai,property tax ,மாநகராட்சி ,சென்னை ,சொத்து வரி

இதுவரை மட்டும் 7 லட்சம் பேர் மட்டுமே சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியை செலுத்தி உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதனை அடுத்து மீதமுள்ள நபர்கள் மார்ச். 31-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்டால் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் கட்டிடம் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் பொருட்கள் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :