Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாலைப்பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி தீவிரம்

சாலைப்பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி தீவிரம்

By: Nagaraj Sat, 25 Feb 2023 11:29:56 PM

சாலைப்பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி தீவிரம்

சென்னை: சென்னையில் 145 கி.மீ நீளத்திற்கு ரூ.79 கோடியில் சாலைப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. சாலைப்பணிகளை வேகமாக நடத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ நீளம்கொண்ட 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளம்கொண்ட 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழையின் போது, சேதமடைந்த சாலைகளில் ஜல்லிக் கலவை, தார்க்கலவை மற்றும் குளிர் தார்க்கலவை கொண்டு சீரமைக்கப்பட்டது.

chennai,corporation,road, ,சாலை, சென்னை, மாநகராட்சி

அப்பணி தற்போது நிறைவு பெற்ற நிலையில், சென்னை மாநகராட்சி சென்னையில் சாலைப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதில் சிங்கார சென்னை திட்டத்தில் 62.72 கி.மீ நீளமுள்ள 362 சாலைகள் ரூபாய் 35 கோடியிலும், தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் 41 கி.மீ நீளமுள்ள 249 சாலைகள் ரூபாய் 18 கோடியிலும், தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்ட 2022 – 23 நிதியில் 58 கி.மீ நீளமுள்ள 319 சாலைகள், ரூபாய் 23 கோடியிலும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை வரும் திங்கள் முதல் தீவிரமாக மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Tags :
|