Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் அதிக பெண் நீதிபதிகள் பணியாற்றுவது சென்னை ஐகோர்ட்டு- துணை ஜனாதிபதி

இந்தியாவில் அதிக பெண் நீதிபதிகள் பணியாற்றுவது சென்னை ஐகோர்ட்டு- துணை ஜனாதிபதி

By: Monisha Sat, 05 Dec 2020 1:11:13 PM

இந்தியாவில் அதிக பெண் நீதிபதிகள் பணியாற்றுவது சென்னை ஐகோர்ட்டு- துணை ஜனாதிபதி

முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் நினைவு தபால் தலையை காணொலி காட்சி மூலம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது:- சென்னை ஐகோர்ட்டில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை ஐகோர்ட்டை பொறுத்தமட்டில் மொத்தம் 63 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் 13 பேர் பெண்கள் என்கிறபோது, அவர்களுக்கு 21 சதவீதம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே, அதிக பெண் நீதிபதிகள் பணியாற்றும் ஐகோர்ட்டாக சென்னை ஐகோர்ட்டு திகழ்கிறது. இது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரியது. இந்த மெச்சத்தகுந்த முன் முயற்சியை மேற்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

postage,publication,female judges,increased,pleasure ,தபால்தலை,வெளியீடு,பெண் நீதிபதிகள்,அதிகம்,மகிழ்ச்சி

1989-ம் ஆண்டு, நீதிபதி பாத்திமாபீவி சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை 8 பெண் நீதிபதிகள் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் தற்போதுள்ள 33 நீதிபதிகளில் 2 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள். இந்தியாவில் உள்ள 25 ஐகோர்ட்டுகளில், 78 பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.

அரசியல், பொது நிர்வாகம், பெரு வணிக நிர்வாகம், சிவில் சொசைட்டி அமைப்புகள் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவானதாக உள்ளது கவலைக்குரிய விஷயமாகும். தேவையான அரசியல் மற்றும் சட்ட முன் முயற்சிகள் மூலம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். 17-வது மக்களவை மிக அதிக அளவாக 78 பெண் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இருப்பினும் இது மொத்தத்தில் வெறும் 14 சதவீதம் மட்டுமே ஆகும் என அவர் பேசினார்.

Tags :