Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு மார்க்கெட் : ஆயுதபூஜை விற்பனை களைகட்டியது , பொருட்களின் விலையும் அதிகரிக்காததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை கோயம்பேடு மார்க்கெட் : ஆயுதபூஜை விற்பனை களைகட்டியது , பொருட்களின் விலையும் அதிகரிக்காததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

By: vaithegi Tue, 04 Oct 2022 06:03:58 AM

சென்னை கோயம்பேடு மார்க்கெட்  :   ஆயுதபூஜை விற்பனை களைகட்டியது , பொருட்களின் விலையும் அதிகரிக்காததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: ஆயுதபூஜை விற்பனை களைகட்டியது ... சென்னை நகரின் பிரதான காய்கறி, பழ மற்றும் பூ சந்தையாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்ந்து கொண்டு வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தை என்ற பெருமைக்குரிய கோயம்பேடு மார்க்கெட்டில் 1,200-க்கும் மேற்பட்ட மொத்த விலை கடைகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லரை விலை கடைகளும் அமைந்துள்ளன.

இதனை அடுத்து இங்கிருந்து சென்னை மாநகர் முழுவதும் காய்கறி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுதவிர திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் காய்கறி கொண்டு செல்லப்படுகின்றன. எல்லா நாட்களும் பரபரப்புடன் காணப்படும் இந்த மார்க்கெட்டில், பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

ayudha pujai,koyambedu market,chennai ,ஆயுதபூஜை ,சென்னை கோயம்பேடு மார்க்கெட்

இதையடுத்து ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தைகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக பழமார்க்கெட் முடியும் திசைப்பகுதிகளிலும், 4 மற்றும் 5-ம் எண் நுழைவுவாயிற்களிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு பொரி, அவல், கடலை, வாழை இலை, கரும்பு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டன. இதுதவிர மார்க்கெட் வளாகத்தில் வாசனை திரவியங்கள் விற்பனை செய்யும் பகுதிகளிலும் பூஜைக்குரிய பொருட்களை ஒரு சேர வாங்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அதேவேளை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் காய்கறி-பழங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால் ஆப்பிள் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.200 தாண்டியும் விற்பனையான சிம்லா ஆப்பிள் தற்போது ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் ஆர்வமாக ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளையும், பூஜை பொருட்களையும் வாங்கி சென்றனர்.

Tags :