முழு ஊரடங்கு அமுலுக்கு வருவதால் நாளை முதல் சென்னை- மதுரை விமான சேவைகள் ரத்து
By: Nagaraj Mon, 22 June 2020 10:39:16 PM
விமான சேவை ரத்து... நாளை முதல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரையில் அதிகரித்து வரும் தொற்றின் காரணமாக நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து
செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக விமான
நிறுவனங்கள் சார்பாக தெரிவித்துள்ளதாவது:
'சென்னையில் இருந்து மதுரை
செல்லும் 4 விமானங்கள் நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல
தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாகவும்'
அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு
அமுல்படுத்தப்படுவதால் சேவை நிறுத்தம் செய்யப்படுவதாக அதில்
கூறப்பட்டுள்ளது.