Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம்

கனமழை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம்

By: Monisha Mon, 23 Nov 2020 3:15:29 PM

கனமழை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது:-

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும்.

தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை இந்த பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.

heavy rain,inspection,storm,warning,announcement ,கனமழை,ஆய்வு,புயல்,எச்சரிக்கை,அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், பெரம்பலூர், செங்கல்பட்டு, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சூறாவளிக் காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 25ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|