Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....சென்னை வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....சென்னை வானிலை மையம் தகவல்

By: vaithegi Tue, 14 June 2022 7:57:52 PM

தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பொதுவாக கனமழை பெய்வது வழக்கம் ஆகும். ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள சமயத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக காணப்படுகிறது.மேலும்,பருவநிலை மாற்றத்தின் காரணமாக அங்கங்கே மழை பொழிந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது இன்றைய வானிலை நிலவரத்தின் படி, தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் அதிகரிக்கும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கும் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏனெனில், கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தும் வருகிறது. அத்துடன் அசானி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

summer,rain,atmospheric downward circulation ,கோடை காலம்,மழை ,வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கனமழையும், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய கூடும்.

மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணத்தால் அதிகரிக்கும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் இன்று ஜூன் 14 ல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதாவது நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|
|