Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்

By: vaithegi Wed, 22 June 2022 4:30:32 PM

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. மேலும் தற்போது சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது.

தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஜூன் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

rain,heavy rain,chennai meteorological center ,மழை,கனமழை ,சென்னை வானிலை மையம்

இன்று வட கர்நாடகா, ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் உள்ளிட்ட இடங்களில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை வட கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும். இதையடுத்து ஜூன் 24 முதல் 26 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு, லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கரையோரம், தென்கிழக்கு அரபிக்கடலில் சூறாவளி வீசக்கூடும்.

மேலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன் குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோர பகுதிகளில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Tags :
|